கடந்த காலத்தையே நினைத்துகொண்டிருந்தால் நிகழ்காலமும் எதிர்காலமும் நன்றாக இருக்காது நாமும் நன்றாக இருக்க முடியாது என்பது உண்மையே.
அதற்காக நம்மை நம் முன்னாலே இகழ்ந்தவர்களுக்கு பாடம் கற்று தராமல் இருந்தாலும் அது அவர்கள் செய்ததை ஆமொதிப்பதகும் .
.............பாவம் ... மனம் ...என்னதான் செய்யும்...
.............உறவுதான் ....நல்லதை செய்யுமோ?...........
...................... குழப்பமே வாழ்க்கையா...........அல்லது ...........
குழம்புவதுதான் வாழ்க்கையா..... ஜான்
Friday, November 6, 2009
Thursday, October 8, 2009
ஏதோ நினைவில் என்னவோ எழுதும்....
ஊரோ புதுசா ஆச்சு ....... உறவோ பழசா ஆச்சு
....... மனசுக்கு என்னவாச்சு........ எண்ணம் மட்டும் இளமையாச்சு.......
இதுதான் இன்று காணும் கிளிமங்கலம் .....
வேளா பிள்ளை (வீர பிள்ளை) அன்று சொன்னது இன்று நினைவுக்கு வருது .........
நண்பர்களை விட உறவுக்கு ஒரு வலிமை எப்போதும் உண்டு என்று ....
அது வயதானால் தான் தெரியும் போலும் .........
அதனால் தான் ........... காலம் தான் ........
உண்மையின் உரை கல் .......
எப்போதும் எந்த நிலையிலும் .......................யாரோ

Wednesday, July 1, 2009
என்றும் கிளிமங்கலம் இப்படித்தான்
கிளிமங்கலத்தில் அப்படி என்னேதான் உள்ளதோ ..
அது கிளிமங்கலத்துக்கு போனால்தான் தெரிகிறது .
பல நாள் கழித்து சென்றாலும் நம் மனது நாம் கண்ட கிளிமங்கலத்தை தான் நினைவூட்டுகிறது .
காலம் திரும்பாது தெரியும் மனசுக்கு இதமான நினைவுக்கு மட்டும் இந்த ஊரில் பஞ்சமில்லை . மக்கள் அப்படி பிள்ளை உள்ளம் .பிள்ளைகளிடம் கட்டும் பரிவு ......... அதுதான் கிளிமங்கலம் ........................
என்றும் இதமுடன் ........................ இளங்கோவன் .அ

Saturday, June 27, 2009
வெய்யில்
கடந்த சில நாட்களாக இங்கு (அமெரிக்காவில் நான் இருக்கும் இடத்தில்) வெய்யில் கடுமையாக இருக்கிறது. கோடை மழை பெய்கிறது, ஆனாலும் வெய்யிலின் தாக்கம் எனது குழந்தைகளை மிகவும் பாதித்துள்ளது.
இது கிளிமங்கலத்தில் உள்ளது போல் இல்லை, இங்கு சூரியன் மறைவதற்கு இரவு மணி ஒன்பது ஆகிறது. கிளிமங்கலத்து மாலை நேரம் இங்கு இரவு பத்து மணி. சூரியன் உதிப்பது காலை ஐந்து அல்லது ஐந்தரை மணிக்கு.
இவையெல்லாம் விட முக்கியமானது, ஆறு மாதத்திற்கு மேலான குளிர் சீசனில் மனதும் உடம்பும் பழகிவிடுகிறது. என்ன கொடுமை! என்ன கொடுமை!
மாமரத்து நிழல் இந்த மாதிரி வெய்யிலுக்கு என்னா இதமா இருக்கும் அதுவும் தழைய படர்ந்து வளர்ந்த ஒட்டு மாமரத்து நிழலில் மத்தியான சாப்பாட்டிற்கு பிறகு தூங்கறதுக்கு ஈடேது.
மாமா புதுசா ஒட்டு மாஞ்செடி வச்சிருக்காங்களாம். அது எப்போ மரமாகி நான் எப்போ அங்க தூங்கறது. அதுக்கு முன்னாடி ஒரேடியா தூங்கறதுக்கு தான் வாய்ப்பு அதிகம்.
சுவாமி ஜி

Thursday, June 4, 2009
முத்தமிழ் நற்பணி மன்றம்
நான் சிறுவனாக இருந்த போது கிளிமங்கலத்தில் முத்தமிழ் நற்பணி மன்றம் துவக்கினார்கள் அந்தகால இளஞர்கள், மாமா, இளங்கோ அண்ணன், தொல்காப்பியன் அண்ணன், பாபு அண்ணன், கேடி என்கிற கி.திருஞானம், கிளார்க் மற்றும் பலர். இதில் திரு கிளார்க் அவர்களின் பங்கு முக்கிமானது.
அப்போது இந்த மன்றத்தின் நோக்கம், குறிக்கோள், எதுவும் தெரியாத வயது எனக்கு. ஆனாலும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி பொங்கும் அப்போதெல்லாம். முத்தமிழ் மன்றத்தின் மூலமாக சில பல நல்ல விஷயங்கள் நடந்தன அப்போது. முக்கியமாக பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி நடந்தது அனைத்து ஜாதி மாணவர்களும் பங்கேற்றனர், போட்டியிட்டனர் வெற்றி பெற்றனர்.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது, முத்தமிழ் மன்றம், வயதானவர்கள், இளைஞர்கள் சிறார்கள் அனைவருக்கும் ஒரு மனமகிழ் மன்றம். ஒரு பொழுது போக்கு, மாலையில் பேசி கொள்ள, இரவில் சீட்டாட, பொதுவாக வயது, வசதி, வித்தியாசமின்றி இணைந்து வாழ வழி செய்தது.
எனக்கு என்னவோ மன்றம் மட்டும் கலையவில்லை, மன்றம் இருந்த வீடு மட்டும் இடிக்கப்படவில்லை, மனங்களும் நல்ல எண்ணங்களும், உறவு முறைகளும் இடிந்தது. கிளிமங்கலமும் மாறிவிட்டது.
Welcome to 21st Century

Friday, January 30, 2009
முத்துவேல் திருஞானம் - சமர்ப்பணம்

கிளிமங்கலத்தின் தொடர்புகளை நீண்ட காலமாக அமெரிக்காவில் இருந்துகொண்டு இழக்காமல் வைத்திருந்தவர். நான் பார்த்த பெரிய மனிதர்களில் மிக சிறந்தவர். கிளிமங்கலத்துக்கு பலவற்றை முதல் முதலாக தந்தவர். முதன் முதலாக பக்கெட் ரேடியோ, டேப் ரேகோர்டேர், டிவி, மைக்ரோவேவ், என பலவற்றை அறிமுகபடுதியவர். பள்ளி மாணவர்களுக்கு போட்டி நடத்தி பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக வெளிநாடுகளை அறிமுகபடுதியவர். பொறுமையுடன் கேட்டால் பல விஷயங்களில் அவருடைய ஞானம் வெளிப்படும். அனைவரும் படிக்க வேண்டும் நிறைய படிக்க வேண்டும் என நினைத்தவர். கடந்த வருடத்தில் கூட நர்சிங் கோர்ஸ் படித்துகொண்டிருந்தவர், காலனுக்கு அவர் படிப்பின் மீதிருந்த காதல் பொறுக்கவில்லை போலும். இறப்பை இவ்வளவு விவேகமாக எதிர்கொண்டவர் எனக்கு தெரிந்து யாருமில்லை. கிளிமங்கலத்தில் வெகு சிலரை தவிர யாருக்கும் அவர் மரணத்தில் இழப்போ வருத்தமோ இல்லைதான் ஆனால் கடைசி காலங்களில் கிளிமங்கலத்தை நிறைய நினைத்து கொண்டிருந்தவர். அதன் முன்னேற்றம் வரும் காலத்தில் எப்படி இருக்கும் பலமுறை வியந்தவர்.
சின்னசாமி பிள்ளை, வேளா பிள்ளை, சு க, என் தாத்தா, சந்து வீட்டு பிள்ளை, காந்தியின் தாத்தா, ராஜகோபால் பிள்ளை, பொன்னுசாமி வாத்தியார், மாமா, மற்றும் பல பேர்கள்பற்றி சுவையான மறுத்து மறுத்து.மறுத்து.மறுத்து நிறைய பகிர்ந்து கொண்டார். முக்கியமாக எப்போதும் மனதில் நிற்பது, என் தாத்தாவின் பெண் கல்வி முயற்சி, திராவிட இயக்க பற்று. சு.க. கரும காரியம் மறுத்தது.
எனது தாயாரிடமும் எனது சிறிய தாயாரிடமும் அவருக்கு இருந்த பற்று என்றும் மறக்க முடியாது. அவரின் உதவியால் அவரது தாயார் மற்றுமின்றி எனது பாட்டி பெற்றோர் அனைவரும் நியூ யார்க் மற்றும் அமெரிக்காமுக்கிய பார்த்து மகிழ்ந்தனர்.
எனக்கு அறிவுரைகளை கூட தன்னுடைய கருத்துகளாக திணிக்காமல் சொன்னவர். எனக்கு அமெரிக்காவில் தந்தை போல் இருந்தவர். கிளிமங்கலத்தை அவர் போல் எனக்கு அழகாக ஞாபக மூட்டியவர், இனி அதுபோல் கேட்டுக்கொள்ள எனது பாட்டி தான் வேண்டும். கடைசியாக பார்த்துவிட்டு வந்த பொது கூட, நான் பத்திரமாக வந்து விட்டேனா என்று அறிந்துகொள்ள நான் வந்த உடனே போன் செய்து எனது நலனை விசாரித்தவர். இந்த இழப்பை எப்படி ஈடு செய்வது

சுவாமி கணேசன்
Subscribe to:
Posts (Atom)