Saturday, June 27, 2009

வெய்யில்

கடந்த சில நாட்களாக இங்கு (அமெரிக்காவில் நான் இருக்கும் இடத்தில்) வெய்யில் கடுமையாக இருக்கிறது. கோடை மழை பெய்கிறது, ஆனாலும் வெய்யிலின் தாக்கம் எனது குழந்தைகளை மிகவும் பாதித்துள்ளது.

இது கிளிமங்கலத்தில் உள்ளது போல் இல்லை, இங்கு சூரியன் மறைவதற்கு இரவு மணி ஒன்பது ஆகிறது. கிளிமங்கலத்து மாலை நேரம் இங்கு இரவு பத்து மணி. சூரியன் உதிப்பது காலை ஐந்து அல்லது ஐந்தரை மணிக்கு.

இவையெல்லாம் விட முக்கியமானது, ஆறு மாதத்திற்கு மேலான குளிர் சீசனில் மனதும் உடம்பும் பழகிவிடுகிறது. என்ன கொடுமை! என்ன கொடுமை!

மாமரத்து நிழல் இந்த மாதிரி வெய்யிலுக்கு என்னா இதமா இருக்கும் அதுவும் தழைய படர்ந்து வளர்ந்த ஒட்டு மாமரத்து நிழலில் மத்தியான சாப்பாட்டிற்கு பிறகு தூங்கறதுக்கு ஈடேது.

மாமா புதுசா ஒட்டு மாஞ்செடி வச்சிருக்காங்களாம். அது எப்போ மரமாகி நான் எப்போ அங்க தூங்கறது. அதுக்கு முன்னாடி ஒரேடியா தூங்கறதுக்கு தான் வாய்ப்பு அதிகம்.

சுவாமி ஜி