கிளிமங்கலத்தின் தொடர்புகளை நீண்ட காலமாக அமெரிக்காவில் இருந்துகொண்டு இழக்காமல் வைத்திருந்தவர். நான் பார்த்த பெரிய மனிதர்களில் மிக சிறந்தவர். கிளிமங்கலத்துக்கு பலவற்றை முதல் முதலாக தந்தவர். முதன் முதலாக பக்கெட் ரேடியோ, டேப் ரேகோர்டேர், டிவி, மைக்ரோவேவ், என பலவற்றை அறிமுகபடுதியவர். பள்ளி மாணவர்களுக்கு போட்டி நடத்தி பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக வெளிநாடுகளை அறிமுகபடுதியவர். பொறுமையுடன் கேட்டால் பல விஷயங்களில் அவருடைய ஞானம் வெளிப்படும். அனைவரும் படிக்க வேண்டும் நிறைய படிக்க வேண்டும் என நினைத்தவர். கடந்த வருடத்தில் கூட நர்சிங் கோர்ஸ் படித்துகொண்டிருந்தவர், காலனுக்கு அவர் படிப்பின் மீதிருந்த காதல் பொறுக்கவில்லை போலும். இறப்பை இவ்வளவு விவேகமாக எதிர்கொண்டவர் எனக்கு தெரிந்து யாருமில்லை. கிளிமங்கலத்தில் வெகு சிலரை தவிர யாருக்கும் அவர் மரணத்தில் இழப்போ வருத்தமோ இல்லைதான் ஆனால் கடைசி காலங்களில் கிளிமங்கலத்தை நிறைய நினைத்து கொண்டிருந்தவர். அதன் முன்னேற்றம் வரும் காலத்தில் எப்படி இருக்கும் பலமுறை வியந்தவர்.
சின்னசாமி பிள்ளை, வேளா பிள்ளை, சு க, என் தாத்தா, சந்து வீட்டு பிள்ளை, காந்தியின் தாத்தா, ராஜகோபால் பிள்ளை, பொன்னுசாமி வாத்தியார், மாமா, மற்றும் பல பேர்கள்பற்றி சுவையான மறுத்து மறுத்து.மறுத்து.மறுத்து நிறைய பகிர்ந்து கொண்டார். முக்கியமாக எப்போதும் மனதில் நிற்பது, என் தாத்தாவின் பெண் கல்வி முயற்சி, திராவிட இயக்க பற்று. சு.க. கரும காரியம் மறுத்தது.
எனது தாயாரிடமும் எனது சிறிய தாயாரிடமும் அவருக்கு இருந்த பற்று என்றும் மறக்க முடியாது. அவரின் உதவியால் அவரது தாயார் மற்றுமின்றி எனது பாட்டி பெற்றோர் அனைவரும் நியூ யார்க் மற்றும் அமெரிக்காமுக்கிய பார்த்து மகிழ்ந்தனர்.
எனக்கு அறிவுரைகளை கூட தன்னுடைய கருத்துகளாக திணிக்காமல் சொன்னவர். எனக்கு அமெரிக்காவில் தந்தை போல் இருந்தவர். கிளிமங்கலத்தை அவர் போல் எனக்கு அழகாக ஞாபக மூட்டியவர், இனி அதுபோல் கேட்டுக்கொள்ள எனது பாட்டி தான் வேண்டும். கடைசியாக பார்த்துவிட்டு வந்த பொது கூட, நான் பத்திரமாக வந்து விட்டேனா என்று அறிந்துகொள்ள நான் வந்த உடனே போன் செய்து எனது நலனை விசாரித்தவர். இந்த இழப்பை எப்படி ஈடு செய்வது

சுவாமி கணேசன்