நான் சிறுவனாக இருந்த போது கிளிமங்கலத்தில் முத்தமிழ் நற்பணி மன்றம் துவக்கினார்கள் அந்தகால இளஞர்கள், மாமா, இளங்கோ அண்ணன், தொல்காப்பியன் அண்ணன், பாபு அண்ணன், கேடி என்கிற கி.திருஞானம், கிளார்க் மற்றும் பலர். இதில் திரு கிளார்க் அவர்களின் பங்கு முக்கிமானது.
அப்போது இந்த மன்றத்தின் நோக்கம், குறிக்கோள், எதுவும் தெரியாத வயது எனக்கு. ஆனாலும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி பொங்கும் அப்போதெல்லாம். முத்தமிழ் மன்றத்தின் மூலமாக சில பல நல்ல விஷயங்கள் நடந்தன அப்போது. முக்கியமாக பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி நடந்தது அனைத்து ஜாதி மாணவர்களும் பங்கேற்றனர், போட்டியிட்டனர் வெற்றி பெற்றனர்.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது, முத்தமிழ் மன்றம், வயதானவர்கள், இளைஞர்கள் சிறார்கள் அனைவருக்கும் ஒரு மனமகிழ் மன்றம். ஒரு பொழுது போக்கு, மாலையில் பேசி கொள்ள, இரவில் சீட்டாட, பொதுவாக வயது, வசதி, வித்தியாசமின்றி இணைந்து வாழ வழி செய்தது.
எனக்கு என்னவோ மன்றம் மட்டும் கலையவில்லை, மன்றம் இருந்த வீடு மட்டும் இடிக்கப்படவில்லை, மனங்களும் நல்ல எண்ணங்களும், உறவு முறைகளும் இடிந்தது. கிளிமங்கலமும் மாறிவிட்டது.
Welcome to 21st Century
Thursday, June 4, 2009
Subscribe to:
Posts (Atom)